Friday 1 June 2012

Saviour's Arrival

   The time for the fulfillment of Salvation Plan came, when Israelites under the rule of Romans. The Saviour appeared in this world to fulfill the expectations of the people and prophecies of the prophets. God the holy who created this universe, incarnate as a ordinary human in the earth. God the Son who is omnipotent, appeared in this world as a innocent child. 'God sent his Son, born of a woman' (Galatians 4:5).
   Jews awaited with expectation for the forthcoming of Messiah in the glory of king to redeem them from the worldly slavery. In that time, God the Son Jesus who is the eternal king incarnate as a human to save the people from the slavery to sin. As prophet Isaiah prophesied, He was appeared as a son of a virgin and Immanuel [Matthew 1:22]. "For a Child has been born for us, a Son given to us; authority rests upon His shoulder; and He is named Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace" (Isaiah 9:6).
   Like Chinese expected, Jesus appeared as a Holy Person and the Master of the whole world. The following prophecy also fulfilled in him: "your Teacher will not hide himself any more, but your eyes shall see your Teacher" (Isaiah 30:20). As the Greek philosopher Socrates expected, He teach us 'how do we behave with the God and humans.' "You shall love the Lord your God with all your heart, and with all your soul, and with all your mind. This is the greatest and first commandment. And a second is like it: You shall love your neighbor as yourself" (Matthew 22:37-39).
   As Plato expected, Jesus came to the world 'to preach in the God's name and to establish the virtue among the people.' Like Itr Chirchi, a disciple of Confucius said, "He is the mediator between humanity and heaven." He was made the miracles as the prophet predicted, "Then the eyes of the blind shall be opened, and the ears of the deaf unstopped; then the lame shall leap like a deer, and the tongue of the speechless sing for joy" (Isaiah 35:5-6). "Jesus of Nazareth, who attested to you by God with deeds of power, wonders, and signs that God did through him among you" (Acts of the Apostles 2:22).
மீட்பரின் வருகை

   இஸ்ரயேல் மக்கள் ரோமையரின் ஆட்சியின்கீழ் இருந்த வேளையில் கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறும் காலம் வந்தது. மக்களின் எதிர்பார்ப்பையும், இறை வாக்கினர்களின் முன்னறிவிப்பையும் நிறைவேற்றும் வகையில் மீட்பர் இந்த உலகில் தோன்றினார். இந்த பிரபஞ்சத்தையே படைத்த தூயவரான கடவுள், ஒரு சாதாரண மனிதராக பூமியில் அவதரித்தார். எல்லாம் வல்லவரான இறைமகன், எதுவுமே அறியாத ஒரு மாசற்ற குழந்தையாக இந்த உலகத்தில் தோன்றினார். 'கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார்' (கலாத்தியர் 4:5).
   யூதர்கள் உலக அடிமைத்தனத்தில் இருந்து தங்களை மீட்க தங்களை மீட்க, அரச மகிமையோடு மெசியா வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வேளையில் நித்திய அரசரான இறைமகன் இயேசு, மக்களை பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து மக்களை மீட்க மனிதராக அவதரித்தார். இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்தபடி ஓர் கன்னிப் பெண்ணின் மகனாக, இம்மானுவேலாக [மத்தேயு 1:22] அவர் தோன்றினார். "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப் படும்" (எசாயா 9:6).
   சீனர்கள் எதிர்பார்த்தது போன்று தூயவராகவும், உலகம் முழுவதற்கும் குருவாகவும் இயேசு தோன்றினார். "என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்கு இனித் தம்மை மறைத்துக் கொள்ளமாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்" (எசாயா 30:20) என்ற இறைவாக்கும் அவரில் நிறைவேறியது. கிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் எதிர்பார்த்தது போல, 'கடவுளிடமும் மனிதரிடமும் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்' நமக்கு அவர் போதித்தார். "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத் தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை" (மத்தேயு 22:37-39).
   பிளேட்டோ எதிர்பார்த்தது போன்று, 'கடவுளின் பெயரால் போதிக்கவும், மக்களை நல்லொழுக்கத்தில் நிலைநிறுத்தவும்'  இயேசு உலகிற்கு வந்தார். கன்பூசியுசின் சீடரான இற் சீற்சீ கூறுவது போல, "அவர் வானுலகிற்கும் மனிதருக்கும் இடையே நடுவராக விளங்குகிறார்." "அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்" (எசாயா 35:5-6) என்று இறைவாக்கினர் முன்னறிவித்தது போன்று, அற்புதங்கள் செய்பவராக அவர் இருந்தார். "கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையா ங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார்" (திருத்தூதர் பணிகள் 2:22).