Tuesday, 1 May 2012

World's Awaiting

   Since the Salvation plan was planned in the beginning of creation, which was rooted deeply in human hearts. 'Jesus the Son of God who appeared as human in the world is the image of the invisible God. All things were created through him and for him' (Colossians 1:15,16). Therefore according to the will of God the Father, God the Son must had became a man in order to redeem the humanity. This salvation plan was central to the seeking of the humanity towards the God. Only through the priority given to the salvation of humanity, the religious concepts were developed.
   Chinese believed that, "At once, one best gentleman will appear and renew everything. He will be very Holy Person and the Master of the whole world." Itr Chirchi, a disciple of Confucius said that, "This holy Person will be the mediator between humanity and heaven. His domination will be in all places and in all times." Isaiah prophesied the same in the words: "I formed you, and set you as a covenant of the people, a light for the nations" (Isaiah 42:6) as God said to that holy person.
   Romans expected that, "East will get predominance. The person who will reign the whole world will proceed from Judea." Confucius the Chinese philosopher said that, "A holy person will appear in the west. He will establish the peace without involve in the world politics." Micah prophesied the same in the words: "But you, O Bethlehem of Ephrathah, who are one of the little clans of Judah, from you shall come forth for me one who is to rule in Israel" (Micah 5:2) as God said.
   Socrates the Greek philosopher said that, "We have to wait until a person to come and teach us how do we behave with the God and humans." His disciple Plato said that, "You could not establish the virtue among the people, unless God send a person to preach in His name." Isaiah also prophesied that, "The Lord your Teacher will not hide himself any more, but your eyes shall see your Teacher" (Isaiah 30:20).
   A Greek myth 'Prometheus' said, "Do not expect for an end to this curse, until the God appear and accept the evil which caused by your own sins!" 'Sathapatha Brahmana' of India said, "Prajapathi has humanity which deserves to dead and divinity which is not deserved to dead. After he sacrifice himself for the people, he made the sacrifice offerings to indicate him." In the same way Isaiah prophesied that, "He was stricken for the transgression of the people; make his life an offering for sin" (Isaiah 53:8,10).
உலகின் காத்திருப்பு

   படைப்பின் தொடக்கத்திலேயே கடவுளின் மீட்புத் திட்டம் திட்டமிடப்பட்டிருந்தது என்பதால், அது மனித உள்ளங்களில் ஆழமாக வேரூன்றி இருந்தது. 'உலகில் மனிதராக தோன்றிய இறைமகன் இயேசு கட்புலனாகாத கடவுளது சாயல். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன' (கொலோசையர் 1:15,16). எனவே இறைத்தந்தை யின் திருவுளப்படி, மனித குலத்தை மீட்க இறைமகன் மனிதராக வேண்டியிருந்தது. இந்த மீட்புத் திட்டமே, கடவுளை நோக்கிய மனிதர்களின் தேடலுக்கு மையமாக இருந்தது. சமய கருத்துகளும் மனித மீட்பை முன்னிறுத்தியே வளர்ச்சி பெற்றன.
   "ஒரு காலத்தில் சிறந்த பண்பாளர் ஒருவர் தோன்றி அனைத்தையும் புதுப்பிப்பார். அவர் மிகத் தூயவராகவும், உலகம் முழுவதற்கும் குருவாகவும் விளங்குவார்" என்று சீன மக்கள் நம்பினர். "இத்தூயவர் வானுலகிற்கும் மனிதருக்கும் இடையே நடுவராக விளங்குவார். அவரது ஆதிக்கம் எல்லா காலத்திலும், அனைத்து இடங்களிலும் இருக்கும்" என கன்பூசியுசின் சீடரான இற் சீற்சீ என்பவர் கூறியுள்ளார். கடவுள் தூய வரிடம், "மக்களுக்கு உடன்படிக்கையாகவும், பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்" (சாயா 42:6) என்று கூறியதாக இறைவாக்கினர் எசாயாவும் இதை முன்னறிவித்துள்ளார்.
   "கிழக்குத் திசை மேன்மை அடையப்போகிறது. உலகம் முழுவதையும் ஆள்பவர் யூதேயாவில் இருந்து புறப்படுவார்" என்று ரோமானிய மக்கள் எதிர்பார்த்தனர். "மேற் குத் திசையில் தூயவர் ஒருவர் தோன்றுவார். அவர் உலக அரசியலை நடத்தாமலே அமைதியை நிலைநாட்டுவார்" என்று சீன ஞானியான கன்பூசியுஸ் கூறியுள்ளார். "நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலில் என் சார்பாக ஆளப்போகின்றவர் உன்னிடமி ருந்தே தோன்றுவார்" (மீக்கா 5:2) என்று கடவுள் கூறியதாக இறைவாக்கினர் மீக்காவும்  இதனை முன்னறிவித்துள்ளார்.
   "கடவுளிடமும் மனிதரிடமும் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, நமக்கு ஒருவர் வந்து போதிக்கும்வரை நாம் காத்திருக்க வேண்டும்" என்று கிரேக்க தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் கூறினார். அவரது சீடரான பிளேட்டோ "கடவுளே தமது பெயரால் போதிக்கும்படி உங்களிடம் ஒருவரை அனுப்பவில்லை என்றால், மக்களை நல்லொழுக்கத்தில் நிலைநிறுத்த உங்களால் முடியாது" என்று கூறியுள்ளார். இதையே, "என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்கு இனித் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்" (எசாயா 30:20) என்று இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்துள்ளார்.
   "கடவுளே தோன்றி, உன் சொந்தப் பாவங்களால் உண்டான தீமையைத் தம்மீது ஏற்றுக்கொள்ளும்வரை, இந்த சாபத்துக்கு முடிவு இருக்கும் என்று எதிர்பார்க்காதே!" என்று கிரேக்க புராணமான 'புரோமெத்தேயுஸ்' கூறுகிறது. "பிரஜாபதி சாவுக்குரிய மனிதத்தன்மையும், சாவாத கடவுள்தன்மையும் கொண்டவர். தன்னை மக்களுக்காக கையளித்தப்பின், பலி செலுத்துதலைத் தனக்கு ஓர் அடையாளமாக வைத்தார்" என்று இந்தியாவின் 'சதப்பத பிராமண'த்தில் எழுதப்பட்டுள்ளது. "அவரோ மக்களின் குற்றங் களை முன்னிட்டுக் கொலையுண்டார்; தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்" (எசாயா 53:8,10) என்று எசாயா இறைவாக்கினரும் முன்னறிவித்துள்ளார்.