Thursday 1 March 2012

Original Sin

   God made the humanity to seek, know, love and reach Him. God created humankind in his image, in the image of God he created them (Genesis 1:27). That means in his likeness, God made humans with thought, word and action. God blessed them, and God said to them, "Be fruitful and multiply, and fill the earth and subdue it; and have dominion over the fish of the sea and over the birds of the air and over every living thing that moves upon the earth" (Genesis 1:28).
   First of all, the nature help us to accept the God. We can know the Creator while see the created beings. From the greatness and beauty of created things comes a corresponding perception of their Creator. The world and the whole universe are expressing the predominance of their Creator. Only through the unmeasurable power of the nature, human the new born baby of the earth began to worship the God, who is the source energy. We can feel here is his reasoning sense worked. From this, the human life got a good meaning.
   All people who were ignorant of God were foolish by nature; nor did they recognize the artisan while paying heed to his works; but they supposed that either fire or wind or swift air, or the circle of the stars, or turbulent water, or the luminaries of heaven were the gods that rule the world. If through delight in the beauty of these things people assumed them to be gods, and if people were amazed at their power and working, let them perceive from them how much more powerful is the one who formed them (Wisdom of Solomon 13:1-4).
   The sin was originated from the human ignorance. Sculpture the fruit of the tree was separate the human from the God and prompted to do the sin. The people were leaving the Creator and worship the created beings. So that, they move away from the grace of God and lost their eternal life; the aim of the God in human creation became questioned. It was difficult to know the true God for people due to their worldly conducts. So they need the salvation. The salvation plan must have fulfilled in this world that destined by God.
தொடக்கப் பாவம்

   கடவுள் தம்மை தேடி, அறிந்து, அன்பு செய்து, அவரை அடைய மனிதரைப் படைத்தார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார் (தொடக்கநூல் 1:27). அதாவது அவரது சாயலில், சிந்தனை, சொல், செயல் கொண்டவர்களாக கடவுள்  மனிதரைப் படைத்தார்.  கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட் படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார் (தொடக்கநூல் 1:28).
   மனிதன் கடவுளை ஏற்றுக்கொள்ள முதலில் துணை நிற்பது இயற்கையே! படைப்புப் பொருட்களைப் பார்த்து படைத்தவரை அறிந்துகொள்ள முடியும். படைப்புகளின் பெருமையினின்றும் அழகினின்றும் அவற்றைப் படைத்தவரை ஒப்புநோக்கிக் கண்டு உணரலாம். நாம் வாழும் இந்த உலகமும், முழு பிரபஞ்சமுமே தம்மைப் படைத்த வரின் மாண்பைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் பேராற்றலைக் கண்டே, இந்த பூமியின் புதிய குழந்தையாக தோன்றிய மனிதன் ஆற்றலின் ஊற்றாகிய கடவுளை வழிபடத் தொடங்கினான். இங்கே அவனது பகுத்தறிவு வேலை செய்ததை நாம் உணரமுடிகிறது. இதிலிருந்து மனித வாழ்க்கை நல்லதோர் அர்த்தம் பெறுகிறது.
   கடவுளை அறியாத மனிதர் அனைவரும் இயல்பிலேயே அறிவிலிகள் ஆனார்கள். கைவினைகளைக் கருத்தாய் நோக்கியிருந்தும் கைவினைஞரை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. மாறாக, தீயோ, காற்றோ, சூறாவளியோ, விண்மீன்களின் சுழற் சியோ, அலைமோதும் வெள்ளமோ, வானத்தின் சுடர்களோதாம் உலகை ஆளுகின்ற தெய்வங்கள் என்று அவர்கள் கருதினார்கள். அவற்றின் அழகில் மயங்கி அவற்றை அவர்கள் தெய்வங்களாகக் கொண்டார்கள் என்றால், அவற்றின் ஆற்றலையும் செயல் பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கி யவர் அவற்றைவிட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும் (சாலமோனின் ஞானம் 13:1-4).
   மனிதரின் அறியாமையில் இருந்துதான் பாவம் தோன்றியது. மரத்தின் கனியாகிய சிலை மனிதரை உண்மை கடவுளிடம் இருந்து பிரித்து பாவம் செய்ய தூண்டியது. மனிதர் படைத்தவரை விட்டுவிட்டு படைப்புப் பொருட்களை வழிபட்டனர். இதனால் அவர்கள் கடவுளின் அருளில் இருந்து விலகி, நிலை வாழ்வை இழந்தனர்; கடவுள் மனிதரைப் படைத்ததன் நோக்கம் கேள்விக்கு உள்ளானது. மனிதர் உலகப்போக்கில் வாழ்ந்ததால் உண்மை கடவுளை அறிய முடியாதவர் ஆயினர். எனவே அவர்களுக்கு மீட்பு தேவைப்பட்டது. கடவுளின் முன்னறிவின்படி இவ்வுலகில் மீட்புத் திட்டம் நிறைவேற வேண்டியிருந்தது.