Wednesday, 1 February 2012

God's Creations

   For us there is one God, the Father, from whom are all things and for whom we exist, and one Lord, Jesus Christ, through whom are all things and through whom we exist (1 Corinthians 8:6). For in him all things in heaven and on earth were created, things visible and invisible, whether thrones or dominions or rulers or powers--all things have been created through him and for him (Colossians 1:16).
   God the Father created everything in the universe in which we live for His Son. He is the Word, who in the beginning with God. All things came into being through him, and without him not one thing came into being. What has come into being  (John 1:2-3). He is the reflection of God the Father's glory and the exact imprint of God's very being, and he sustains all things by his powerful word (Hebrews 1:3).
   God was made everything through his Word and give the Life motion to them by his Spirit. By the word of the Lord his works are made. He has set in order the splendors of his wisdom (Sirach 42:15,21). The performing wisdom of God is the Holy Spirit. In the beginning when God created the heavens and the earth, the Spirit of God was hovering (Genesis 1:1,2). 
   Many People see the deficiencies in the creation of the God. They thought there is no fulfillment in God's creation. The science said, each and every action has its equal and opposite reaction. Therefore, each and every positive creation is fulfilled by its equal and negative creation. And, the deficiencies we see in the creations are show their uniqueness. To produce same model creations machines are enough; there is no need of the God. The existence of unique creations is truly the evidence for the presence of the God.
   We can't say that everything Science says are true. Earth is evolved from the Sun is just a unproved theory. If a substance is come out of another substance, the characteristic features of those two must same at least for half the size. But Sun and Earth are different in many things; particularly, many elements that are seen in the Earth ate not available in the Sun. So there is no necessity to deny the Bible's saying that Sun is created to give the light for Earth.
   Also, the theory of evolution is explained on the basis of Bible's saying. God said, "Let the waters bring forth swarms of living creatures, and let birds fly above the earth across the dome of the sky." So God created the great sea monsters and every living creature that moves, of every kind, with which the waters swarm, and every winged bird of every kind (Genesis 1:20-21). This is the basis for the evolution of living beings from the water.
கடவுளின் படைப்புகள்

   நமக்கு கடவுள் ஒருவரே; அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன; அவருக்காக நாம் இருக்கின்றோம். அவ்வாறே, நமக்கு ஆண்டவரும் ஒருவரே; அவரே இயேசு கிறிஸ்து. அவர் வழியாகவே அனைத்தும் வருகின்றன; அவர் மூலமாகவே நாம் வாழ்கிறோம் (1 கொரிந்தியர் 8:6). விண்ணிலுள்ளவை, மண்ணி லுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப் பட்டன (கொலோசையர் 1:16).
   தந்தையாம் கடவுள், நாம் வாழும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தம் மகனுக்காக அவர் வழியாகவே படைத்தார். வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார். அனைத்தும் அவரால் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை (யோவான் 1:2-3). தந்தையாம் கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் வர், தம் வல்லமை மிகுந்த சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார் (எபிரேயர் 1:3).
   கடவுள் தமது வாக்கினால் அனைத்தையும் படைத்து, தம் ஆவியால் அவற்றுக்கு உயிர் இயக்கம் அளித்தார். ஆண்டவருடைய சொல்லால் அவருடைய செயல்கள் உண்டாகின்றன. அவர் தமது ஞானத்தின் அரும்பெரும் செயல்களை ஒழுங்கு படுத்தியுள்ளார்; அவரே என்றென்றும் இருக்கின்றவர் (சீராக் 42:15,21). கடவுளின் செயல்படுத்தும் ஞானமே தூய ஆவி. தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது (தொடக்க நூல் 1:1,2).
   மனிதர் பலர் கடவுளின் படைப்பில் குறைகளைக் காண்கின்றனர்; கடவுளின் படைப்பில் முழுமை இல்லை என்று நினைக்கின்றனர். ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான எதிர் செயல் இருப்பதாக அறிவியல் கூறுகிறது. எனவே, ஒவ்வொரு நேர்மறை படைப்பும் அதற்கு சமமான எதிர்மறை படைப்பில் நிறைவு காண்கிறது. மேலும், படைப்புகளில் நாம் காணும் குறைபாடுகள் அவற்றின் தனித்தன்மையையே எடுத்து காட்டுகின்றன. ஒரே மாதிரியான படைப்புகள் வேண்டும் என்றால், அவற்றைத் தயாரிக்க எந்திரங்களே போதும்; கடவுள் தேவையில்லை. ஒவ்வொரு படைப்பும் தனித்தன்மையோடு இருப்பது உண்மையாக கடவுள் இருப்பதற்கான ஒரு சான்றாகும்.
   அறிவியல் கூறுவது அனைத்துமே உண்மை என்று நாம் கூற முடியாது. சூரியனில் இருந்தே பூமி தோன்றியது என்பது நிரூபிக்கப்படாத ஒரு கொள்கை மட்டுமே. ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருள் தோன்றுகிறது என்றால், அவை இரண்டின் இயல்புகளும் பாதி அளவாவது ஒத்திருக்க வேண்டும். ஆனால் சூரியனும் பூமியும் பெரும்பாலானவற்றில் வேறுபட்டே காணப்படுகின்றன; குறிப்பாக பூமியில் காணப் படும் பெரும்பாலான தனிமங்கள் சூரியனில் காணப்படவில்லை. எனவே, பூமிக்கு ஒளிதரவே சூரியன் படைக்கப்பட்டது என்ற பைபிளின் கூற்றை மறுக்க வேண்டிய அவசியம்  இல்லை.
   மேலும், உயிரினங்களின் தோற்றம் பற்றி பைபிள் கூறுவதை அடிப்படையாக கொண்டே, பரிணாம வளர்ச்சி தத்துவம் விவரிக்கப்படுகிறது. அப்பொழுது கடவுள், "திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்றுவிப்பதாக! விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக!" என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார் (தொடக்க நூல் 1:20-21). நீரில் இருந்தே முதல் உயிரினங்கள் தோன்றின என்பதற்கு இதுவே அடிப்படை ஆகும்.