Sunday 1 January 2012

Triune God

   There is a God who creates the whole Universe in which we live. In the beginning God created the heavens and the earth (Genesis 1:1). If one say everything were made without God, that is foolishness. Because our knowledge says, if there is a creation there must be a creator.
   If we can made anything out of nothing, then we may believe that there is no God. Otherwise we can't deny His presence. Each and every living things have the energy to create a new life. That energy is activated by the God. Without God there is no life.
   God was made everything through His Word and give the Life to them by His Spirit. God said, "Let there be light"; and there was light (Genesis 1:3). The LORD God breathed into his nostrils the breath of life; and the man became a living being (Genesis 2:7). So even there is one God, He act as three Persons the Father, the Son (Word), the holy Spirit. This is the mystery revealed by the God.
   This universe in which we live is like a play ground of robots. The living and nonliving matters which are all we see are act like unthinkable robots. We the human beings are act as self thinking robots. Whoever know about video games can easily understand this.
   To create a play ground of robots there must be a group of experts. Like that God also act as a group. Like more than one members unitedly act as a group, three persons unitedly act as one God. As every member of a group have the character of that group, all the three Persons of the God has divinity. So we call the God as Triune God.
   All the three persons of the God namely the Father, the Son and the Holy Spirit are have the same will, same wisdom, same omnipotence and same divinity, so They act as single God. God the Father act as a group's head. The Son and the Holy Spirit are unite with the Father and act according His will. The Son is the word of the Father, and Holy Spirit is the love proceeds from the Father and the Son. Therefore they are not three Gods; but, only one God.
   In a man, there are three processes thought, speech and action have done. In the same way all the three Persons of the God act. In the one God the Father is as thought, the Son is as speech and the Holy Spirit is as action. Therefore in the God's revelation we see the Father as Planner and Creator, the Son as Preacher and Redeemer, and the Holy Spirit as Performer and Life giver. Like thought, speech and action are separated in the human, the Father, the Son and the Holy Spirit are three distinct persons eternally in one God.
மூவொரு கடவுள்

   நாம் வாழும் பிரபஞ்சம் முழுவதையும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கின்றார். தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தார் (தொடக்க நூல் 1:1). கடவுள் இல்லாமலேயே அனைத்தும் உருவாகிவிட்டன என்று ஒருவர் கூறுவது அறிவீனம். ஏனெனில் படைப்பு ஒன்று இருக்கும்போது, அதனை படைத்த ஒருவர் இருக்க வேண்டும் என்று நம் பகுத்தறிவு கூறுகிறது.
   எதுவும் இல்லாமலேயே நம்மால் எதையாவது உருவாக்க முடியும் என்றால், கடவுள் இல்லை என்று நாம் நம்பலாம். மற்றபடி, அவர் இருப்பதை நாம் மறுக்க முடியாது. உயிருள்ளவை ஒவ்வொன்றும் புதிய உயிரை உருவாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. அந்த ஆற்றல் கடவுளாலேயே தூண்டப்படுகிறது. கடவுள் இல்லையென்றால் எந்த உயிரும் இருக்காது.
   கடவுள் தமது வாக்கினால் அனைத்தையும் படைத்து, தம் ஆவியால் அவற்றுக்கு உயிர் அளித்தார். கடவுள், "ஒளி தோன்றுக" என்றார்; ஒளி தோன்றிற்று (தொடக்க நூல் 1:3). ஆண்டவராகிய கடவுள் அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் (தொடக்க நூல் 2:7). எனவே கடவுள் ஒருவராக இருந்தாலும், அவர் தந்தை, மகன் (வாக்கு), தூய ஆவி என்ற மூன்று ஆட்களாக செயல்படுகிறார். இது கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட மறைபொருள்.
   நாம் வாழும் இந்த பிரபஞ்சம் ரோபோக்களின் விளையாட்டுக் களம் போன்றது. நாம் காணும் உயிருள்ளவை, உயிரற்றவை அனைத்தும் சொந்தமாக சிந்திக்க இயலாத ரோபோக்களைப் போன்று செயல்படுகின்றன. மனிதர்களாகிய நாம் தானாகவே சிந்தித்து செயல்படும் ரோபோக்கள் போல செயல்படுகிறோம். திரை விளையாட்டு களைப் பற்றி தெரிந்தோர் இதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
   ரோபோக்களின் விளையாட்டுக் களம் ஒன்றை உருவாக்க வேண்டுமென்றால் ஒரு நிபுணர் குழு இருக்க வேண்டும். அவ்வாறே கடவுளும் ஒரு குழுவாக செயல்படுகிறார். ஒன்றுக்கும் மேற்பட்ட பல நபர்கள் இணைந்து ஒரு குழுவாக செயல்படுவது போன்றே, மூன்று ஆட்கள் இணைந்து ஒரே கடவுளாக செயல்படுகின்றனர். ஒரு குழுவைச் சார்ந்த ஒவ்வொருவரும் அக்குழுவின் இயல்பை பெற்றிருப்பது போன்றே, கடவுளின் மூன்று ஆட்களும் கடவுள்தன்மையைக் கொண்டுள்ளனர். எனவே நாம் கடவுளை மூவொரு கடவுள் என்று அழைக்கிறோம்.
   தந்தை, மகன், தூய ஆவி என்ற கடவுளின் மூன்று ஆட்களும் ஒரே திருவுளம், ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மை கொண்டிருப்பதால் ஒரே கடவுளாகவே செயல்படுகின்றனர். தந்தையாம் கடவுள், ஒரு குழுவின் தலைவரைப் போன்று செயலாற்றுகிறார். மகனும், தூய ஆவியும் தந்தையோடு ஒன்றித்து அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகின்றனர். மகன் தந்தையின் வாக்காகவும், தூய ஆவி தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் அன்பாகவும் இருக்கின்றனர். எனவே மூவரும் மூன்று கடவுளர் அல்ல; ஒரே கடவுளே.
   ஒரு மனிதனில் சிந்தனை, சொல், செயல் என்ற மூன்று விதமான செயல்பாடுகள் நடைபெறுகின்றன. அவ்வாறே கடவுளின் மூன்று ஆட்களும் செயல்படுகின்றனர். ஒரே கடவுளில் சிந்தனையாக தந்தையும், சொல்லாக மகனும், செயலாக தூய ஆவியும் இருக்கின்றனர். எனவேதான் இறைவெளிப்பாட்டில் தந்தையை திட்டமிடுபவராகவும் படைப்பவராகவும், மகனை போதகராகவும் மீட்பவராகவும், தூய ஆவியை செயல் ற்றுபவராகவும் உயிரளிப்பவராகவும் காண்கிறோம். மனிதரில் சிந்தனையும் சொல்லும் செயலும் வேறுபட்டு இருப்பது போலவே, ஒரே கடவுளில் தந்தையும் மகனும் தூய ஆவியும் நித்தியத்திற்கும் மூன்று ஆட்களாகப் பிரிந்திருக்கின்றனர்.