Wednesday, 1 August 2012

Christ's Kingdom

   Jesus has divinity and humanity in the whole in himself. He was risen on the third day after death as per his words: "No one takes life from me, but I lay it down of my own accord. I have power to lay it down, and I have power to take it up again. I have received this command from my Father" (John 10:18). By this way, Jesus' divine glory revealed in this world.
   After the resurrection of Jesus Christ, the Apostles received the mission of founding the Kingdom of God in this world. Apostles went all over world to proclaim the gospel as per the words of Jesus: "Go into all the world and proclaim the good news to the whole creation" (Mark 16:15). Jesus' disciples, who filled with the power of the Holy Spirit were proclaim the gospel of Christ with grit. In this way the Christ's Kingdom rooted and start grew for the God.
   Many signs and wonders were done among the people through the apostles. Yet more than ever believers were added to the Lord, great numbers of both men and women, so that they even carried out the sick into the streets, and laid them on cots and mats, in order that Peter's shadow might fall on some of them as he came by. A great number of people would also gather from the towns around Jerusalem, bringing the sick and those tormented by unclean spirits, and they were all cured (Acts 5:12,14-16).
   Jewish council members planned to kill the apostles of Jesus on because of their working miracles. Then Gamaliel, a Pharisee said to the council members, "Fellow Israelites, consider carefully what you propose to do to these men. Keep away from these men and let them alone; because if this plan or this undertaking is of human origin, it will fail; but if it is of God, you will not be able to overthrow them--in that case you may even be found fighting against God!" (Acts 5:35,38-39).
   They were convinced by him, and when they had called in the apostles, they had them flogged. Then they ordered them not to speak in the name of Jesus, and let them go. As they left the council, they rejoiced that they were considered worthy to suffer dishonor for the sake of the name. And every day in the temple and at home they did not cease to teach and proclaim Jesus as the Messiah. The number of the disciples increased greatly in Jerusalem, and a great many of the priests became obedient to the faith (Acts 5:39-42, 6:7). In this way the Kingdom of Christ formed and expanded in this world.
கிறிஸ்துவின் அரசு

   இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் தன்னில் முழுமையாக கொண்டவராக இயேசு விளங்குகிறார். "என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வ தில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்" (யோவான் 10:18) என்று கூறியதற்கு ஏற்ப இறந்த அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இவ்வாறு இயேசுவின் இறைமாட்சி இந்த உலகில் வெளிப்பட்டது.
   இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்கு பின், கடவுளின் அரசை இந்த உலகில் நிறுவும் பணியை திருத்தூதர்கள் பெற்றுக் கொண்டார்கள். "உலகெங்கும் சென்று படைப்பிற் கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்" (மாற்கு 16:15) என்ற இயேசுவின் வார்த்தை களுக்கு ஏற்ப, கடவுளின் அரசை உலகெங்கும் நிறுவ திருத்தூதர்கள் சென்றனர். பெந் தக்கோஸ்து நாளில் தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்ட இயேசுவின் சீடர்கள், கிறிஸ்துவின் நற்செய்தியை மன உறுதியோடு அனைத்து மக்களிடமும் பறைசாற்றி னர். இவ்வாறு, கிறிஸ்துவின் அரசு கடவுளுக்காக வேரூன்றி வளரத் தொடங்கியது.
    மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழி யாய்ச் செய்யப்பட்டன. ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் அவர்களோடு சேர்க்கப் பட்டார்கள். பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக் கைகளிலும் கிடத்திச் சுமந்து கொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்துகொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவ ரும் நலம் பெற்றனர் (திருத்தூதர் பணிகள் 5:12,14-16).
   இயேசுவின் திருத்தூதர்கள் அற்புதங்களைச் செய்து வந்ததால், யூத தலைமைச் சங்கத்தினர் அவர்களை கொன்றொழிக்க திட்டம் தீட்டினர். அப்பொழுது கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: "இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவு ளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்." (திருத்தூதர் பணிகள் 5:35,38-39).
   அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாக கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார் கள். சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக்கொண்டே சென் றது (திருத்தூதர் பணிகள் 5:39-42, 6:7). இவ்வாறு கிறிஸ்துவின் அரசு இவ்வுலகில் தோன்றி விரிவடைந்தது.