மற்றவை

   இந்து, இஸ்லாம் மதங்களைத் தவிர்த்து மற்ற தவறான மதங்களைப் பற்றி இந்த பக்கத்தில் காணலாம். யூதம் மற்றும் சில தவறான கிறிஸ்தவ இயக்கங்கள் ஆகியவை பாதி தவறான மதங்கள். மற்ற ஒரே கடவுள் கொள்கை, பலதெய்வக் கொள்கை மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை ஆகியவற்றைக் கொண்டவை முழுமையாக தவறான மதங்கள் ஆகும். இத்தகைய மதங்களின் நம்பிக்கைகளே அவற்றை தவறான மதங்களாக அடையாளப்படுத்துகின்றன.
யூதமும் தவறான கிறிஸ்தவமும்:
   கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களால் பின்பற்றப்படுவதே யூத மதமாகும். இயேசு கிறிஸ்து மனுவுரு ஏற்பதற்கு முன்பு, யூத மதமே விண்ணும் மண்ணும் படைத்த உண்மை கடவுளில் நம்பிக்கை கொண்ட உண்மை மதமாக இருந்தது. கடவுள் தமது முன்குறிக்கப்பட்டத் திட்டத்தின்படி உலகை மீட்க, குலமுதுவர் ஆபிரகாம் வழியாக யூத மக்களினத்தை தேர்ந்துகொண்டார். இஸ்ரயேல் மக்கள், உண்மை கடவுளை அவரது உண்மை இயல்பில் வழிபட்டனர்; அவரை ஆண்டவராகிய கடவுள் என்று அழைத்த அவர்கள், அவருக்கு சிலைகள் எதையும் செய்ததில்லை. எனவே கடவுள் அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்: "நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்; நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்." ஆனால் பிற்காலத்தில், யூதர்கள் உண்மை கடவுளை விட்டு விலகி போலி தெய்வங்களை வழிபட்டனர். அவர்களின் செயலுக்காக கடவுள் அவர்களை தண்டித்ததுடன், மீட்பரை விரைவில் அனுப்புவ தாகவும் வாக்களித்தார். அந்த நேரம் வந்தபோது இயேசு இந்த உலகில் தோன்றினார். ஆனால், கடவுளின் இரண்டாம் ஆளாகிய அந்த மீட்பரை யூதர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே, யூதம் ஒரு பாதி தவறான மதமாகும்.
   சரியான கிறிஸ்தவ நம்பிக்கைகள் மற்றும் மதிப்பீடுகள் பற்றி கவலை கொள்ளாத கிறிஸ்தவ பிரிவுகளே தவறான கிறிஸ்தவ மதங்களாகும். கிறிஸ்தவ விசுவாசத்தின் மையம் கிறிஸ்துவின் பாடுகளே ஆகும். இயேசுவின் சிலுவை மரணத்தாலேயே மனிதகுலம் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு தந்தை கடவுளோடு ஒப்புரவாக்கப் பட்டுள்ளது. ஆனால் பல கிறிஸ்தவ பிரிவுகள், இயேசுவின் சிலுவை மரணத்தால் வந்த மீட்பின் செய்தியை தவிர்த்தோ, திரித்தோ வருகின்றன. அவை, மரணத்தை வெற்றி கொண்ட அற்புதங்கள் செய்யும் இயேசுவுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. மரணம் இன்றி உயிர்ப்பு இல்லை! சிலுவை இன்றி மீட்பு இல்லை! இயேசுவின் கல்வாரிப் பாடுகளுக்கு அடையாளமாக நற்கருணை விளங்குகிறது. நற்கருணையில் இயேசுவின் உண்மை பிரசன்னம் இருப்பது பல்வேறு அற்புதங்கள் வழியாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. நற்கருணையை ஏற்க மறுக்கும் கிறிஸ்தவ சபைகள் அனைத்தும் தவறானவை. புராட்டஸ்டாண்டு, பெந்தகோஸ்து, யகோவாவின் சாட்சிகள் உள்ளிட்ட பிரிவுகள், அவற்றின் தவறான நம்பிக்கைகள் மற்றும் போதனைகள் காரணமாக பாதி தவறான மதங்களாக உள்ளன.

கடவுள் ஏற்பும் மறுப்பும்:
   கடவுள் ஏற்பு கொள்கை என்பது கடவுளின் இருப்பை நம்புவதும், கடவுள் மறுப்பு கொள்கை என்பது கடவுளின் இருப்பை நம்பாததும் ஆகும். இந்து, இஸ்லாம், பவுத்தம், சமணம், சீக்கியம், சொராஸ்ட்ரியம் உள்ளிட்ட கடவுள் ஏற்பு மதங்கள் கடவுளைப் பற்றிய தவறான நம்பிக்கைகளை கொண்டிருக்கின்றன. இந்து மதம், "பல கடவுள்கள் இருக்கின்றனர்" என்கிறது. பவுத்தமும் சமணமும் மனிதர்களான புத்தரையும் மகா வீரரையும் கடவுளாக காட்டுகின்றன. இந்து, இஸ்லாம் நம்பிக்கைகளின் கலப்பான சீக்கியம் அவற்றின் அடிப்படையில் தவறான இறையியலை வழங்குகிறது. கடவுளுக் கும் தீயசக்திக்கும் இடையிலான போராட்டமே படைப்புகளை நிகழ்த்துவதாக சொராஸ்ட்ரியம் தவறாக போதிக்கிறது. மேலும் சில மதங்கள் ஆவிகளை கடவுள் களாக கருதி அவற்றிடம் வேண்டுதல் செய்கின்றன. சில பிரிவு மக்கள் தீய சக்திகளை தெய்வங்களாக கருதி வழிபடுவது சாத்தானியம் என்று அழைக்கப்படுகிறது. யூதத் தையும் கிறிஸ்தவத்தையும் தவிர மற்ற அனைத்து மதங்களும் கடவுளைப் பற்றியும் நம் வாழ்வைப் பற்றியும் தவறான சிந்தனைகளையே தருகின்றன.
   சில தத்துவ இயக்கங்கள் மனித வாழ்வின் நெறிகளை போதிக்கின்றன. கன்பூசி யனிசம், டாவோயிசம் மற்றும் ஷின்ட்டோயிசம் ஆகியவை தத்துவ அடிப்படையிலான மதங்களாகும். சில பவுத்த, இந்து பிரிவுகளையும் இந்த தத்துவ வகையில் சேர்க்கலாம். இவை கடவுளைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. இவை மனிதர்களின் பிரச்சனை களை கையாளவோ தீர்க்கவோ தகுந்த வழிகளைக் கற்பிக்கின்றன. இவை மனிதரின் இன்பங்களுக்கும் துன்பங்களுக்கும் காரணம் கற்பிப்பதுடன் அவற்றை வாழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளவும் அறிவுறுத்துகின்றன. சில தத்துவ நம்பிக்கைகள் வாழ்வின் துன்பங்களை இருளாகவும், இன்பங்களை ஒளியாகவும் சித்தரிக்கின்றன. கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகள் முன்பே, கடவுளைப் பற்றிய தவறான நம்பிக்கை களை எதிர்க்கும் வகையில் தத்துவங்கள் தோன்றின. ஆனால் அவை மக்களை கடவுள் மறுப்பு கொள்கைக்கு இட்டுச் சென்றன. நாம் காண்பவை, காணாதவை அனைத்தையும் படைத்த கடவுளை புறக்கணிக்கும் கடவுள் மறுப்பு கொள்கை தவறான ஒன்றாகும். ஏனெனில் நமது அறிவு கூறுகிறது: "படைப்பு ஒன்று இருக்கிறது என்றால், அதை படைத்தவர் ஒருவரும் இருக்க வேண்டும்." 

இறுதியாக...
   முற்காலத்தில், உலக மக்கள் கடவுளை பல்வேறு வகைகளிலும் பலவித உருவங்களிலும் தேடினார்கள். எனவே உண்மை கடவுள் மக்களுக்கு தம்மை மனித உருவில் வெளிப்படுத்த திருவுளம் கொண்டார். இஸ்ரயேல் குலத்தின் வழியாக உலகத்தை தமது வருகைக்காக தயார் செய்ய விரும்பினார்; அதற்காகவே யூதர்களின் குலமுதுவரான ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தார். அந்த நேரம் வந்த பொழுது, கடவுள் இயேசு கிறிஸ்துவாக உலகிற்கு வந்தார். எனவே, உலக வரலாற்றில் நிகழ்ந்த கடவுளின் வெளிப்பாட்டை மறுக்கும் எந்த மதமும் தவறான மதமே!
 மேலும் அறிய, வாசியுங்கள்: இயேசுவுக்கு சான்றுகள்